நாங்கள் யார்?
நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் தோற்றமானது 19.09.2016யில் இடைக்கால செயற்பாட்டு குழுவினை கொண்டு தறகாலிகமாக செயற்பட்டது. அதன் பின்னர் இவ் அமைப்பானது, 12.02.2017யில் 26 ஆரம்ப உறுப்பினர்களுடன், சட்டத்தரணி A.L றியாஸ் ஆதம் அவர்களை தலைவராக கொண்ட நிருவாகம் சட்டரீதியாக அமையப்பெற்றது. மேலும் எமது அமைப்பானது தற்காலம் வரை அல்லாஹ்வின் உதவியினை கொண்டு நடைமுறையாண்டின் (2021) தலைவர் ஆசிரியர் ஜனாப் M.I.M.றியாஸ் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் நிருவாகம் செயற்படுகின்றது. எமது அமைப்பானது, ஒரு வீட்டில் மரணம் (மௌத்து) ஏற்படும் வேளைகளில் அம்மக்களுக்கேற்படும் துன்பங்களையும், சிரமங்களையும், இன்னல்களையும் போக்கி, நல்லடக்கத்திற்கான தேவைகளை நிறைவேற்றுவதிலும், மையவாடிகளை பிரதேச சபையுடன் இணைந்து பராமரிப்பு மற்றும் ஒழுங்கமைப்பதும், அத்துடன் கல்வி, சுகாதாரம், சமூக, கலாச்சர விழுமியங்களை சமூக மேம்பாட்டிற்காகச் சாதகமாக்கலும் எனும் நோக்கோடு இறை திருப்தியை நாடி அர்ப்பணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
