இலக்கு
இலங்கையின் முதற்தர ஜனாஸா சேவையினை வழங்குவதோடு, கல்வி, சமய, மற்றும் கலாச்சார மேம்பாட்டினைக் கட்டியெழுப்பி ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளை உருவாக்குதலுமாகும்.
நோக்கு
நிந்தவூர் வாழ் மக்களின் ஜனாஸா தொடர்பான செயற்பாடுகளை இலகுவாகவும், முறையாகவும் நிறைவேற்ற உதவுதல்.
சமூக, கலாச்சர விழுமியங்களை சமூக மேம்பாட்டிற்காகச் சாதகமாக்கலும், சமூக எழுச்சியைக் கட்டியெழுப்பி ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளை உருவாக்க உதவுதலும்.
பெற்றோர்களை இழந்த மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவுதல்.
குறிக்கோள்
ஜனாஸா நல்லடக்கத்திற்கான சகல வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
ஜனாஸா வீட்டிற்குத் தேவையான கூடாரம், குளிப்பாட்டும் தட்டம், சந்துக்கு, கதிரை, கபன் பொதி, வெளிச்ச வசதி என்பன வழங்குதல்.
மையவாடியில் குழி வெட்டுதல், பலகை, ஒலிபெருக்கி வசதி, வெளிச்ச வசதி என்பன வழங்குதல்.
ஜனாஸாக்களைக் கொண்டு வருதல், கொண்டு செல்லுதல்களுக்கு வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
ஏழை ஜனாஸாக்களை முழுமையாகப் பொறுப்பேற்று நல்லடக்கம் செய்தல்.
மையவாடிகளைச் சீரமைப்பதற்கும், ஜனாஸாக்களை ஒழுங்குபடுத்தி (வரிசையாக) அடக்குவதற்கும் உதவி செய்தல்.
ஜனாஸா செய்திகளை பொதுமக்களுக்கு அறியச் செய்தல்.
ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சிகளை நடாத்துதல்.
பெற்றோர்களை இழந்த மாணவர்களைத் தெரிவு செய்து அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வருடாந்த ஊக்குவிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
சமய யாத்திரைகள் மற்றும் கடமைகளுக்கு வழிகாட்டல்.
அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்.