எமது குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கான எதிர்கால தேவைகள்
- வாகன வசதி : தூர இடங்களிலுள்ள எமது மற்றும் அயல் கிராமம் ஜனாஸாக்களை கொண்டுவருதல். உடல் இயலாமை காரணமாக, கொழுப்பு, அம்பாரை,மட்டக்களப்பு மற்றும் கல்முனை வைத்தியசாலைகளுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக செல்லும் வயோதிப வறிய குடும்பங்களுக்கு போக்கு வரத்து வசதிகளைச் செய்து கொடுத்தல். இயற்கை அனர்த்தம் மற்றும் நோய் போன்ற வேளைகளில் அவசர நிலமைக்கு உதவுதல்
- எமது அமைப்பின் செயற்பாட்டிற்காக அலுவலகம், கூட்ட மண்டபம் களஞ்சியம் மற்றும் வாகனத் தரிப்பிடம் கொண்ட நிரந்தரமான கட்டிடம்.
- தாய் தந்தையர்களை இழந்த வறிய மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்கான உதவிகள்(புலமைப்பரிசில்கள், உயர் கல்வி,பிரத்தியோகக் கல்வி மற்றும் ஆன்மீகக் கல்வி திட்டம்)
- ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சிகளை வகுப்புக்களை மஹல்லா ரீதியாக வழங்குவதற்கான உதவிகள்